Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 50)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பரிஸர விநதாநாம் மூர்த்நி துர்வர்ண பங்க்திம் பரிணமயஸி சௌரே: பாதுகே த்வம் ஸுவர்ணம் குஹகஜந விதூரே ஸத்பதே லப்த வ்ருத்தே: க்வநு கலு விதித: தே கோப்யஸௌ தாதுவாத:
பாதுகையே! உன்னைத் தங்கள் தலைகளில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு நீ செய்வது என்ன? அவர்கள் தலைகளில் கெட்ட எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளவற்றை (தலை எழுத்து) தங்கத்தால் எழுதப்பட்ட நல் எழுத்துக்களாக நீ மாற்றி விடுகிறாய். உன்னைத் தீய மக்கள் அண்டிவிடாதபடி நீ வெகு தூரத்தில் உள்ளாய்; இப்படிப்பட்ட ரஸவாதவித்தையை நீ எங்கு கற்றாய்? விளக்கம்- சாதாரண பொருள் ஒன்றைத் தங்கமாக மாற்றும் வித்தைக்கு ரஸவாதம் என்று பெயர். இங்கு மக்களின் தலை எழுத்துக்கள் சாதாரணமாக உள்ளன. ஆனால் பாதுகையைத் தங்கள் தலையில் ஏற்பவர்களின் தலை எழுத்தானது தங்கமாக மாறி விடுகிறது. இதனால் அவர்களும் இந்த உலகத்தில் தங்கம் போன்று அனைவராலும் போற்றும்படியாக மாறிவிடுகின்றனர்.