Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 49)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பதஸரஸிஜயோ: த்வம் பாதுகே ரங்கபர்த்து: மநஸி முநிஜநாநாம் மௌளிதேசே ச்ருதீநாம் வசஸி ச ஸுகவீநாம் வர்த்தஸே நித்யம் ஏகா தத் இதம் வகதம் தே சாச்வதம் வைச்வரூப்யம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீ ஒருவளாக இருந்தபோதிலும் ஒரே நேரத்தில் - ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகள், ரிஷிகளின் மனம், வேதங்களுடைய தலைப்பாகமாகிய வேதாந்தங்கள், தூய கவிஞர்களின் வாக்கு - என்று பல இடங்களில் வாசம் செய்கிறாய். எனவே உனது சரீரம் கண்ணனுடைய சரீரம் போன்று ஒரே நேரத்தில் பலவாக உள்ளது என்று த்யானம் செய்கின்றனர்.
ஒரு பொருள் ஒரே நேரத்தில் பலவாகத் தோற்றம் அளிப்பது வியப்பு அல்லவா? இங்கு பாதுகை பல தன்மைகளில் உள்ளது. இதனைக் காணும்போது ராஸலீலை நேரத்தில் கண்ணன் பலவாகத் தோற்றம் எடுத்தது போன்றும், அர்ஜுனனுக்கு விச்வரூபம் காண்பித்தபோது பலவாகத் தோன்றியது போன்றும் உள்ளது.