Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 48)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

ஜநயிதும் அலம் அர்க்யம் தைத்யஜித் பாதரக்ஷே நமதி மஹதி தேவே நாகஸிந்தோ: விசீர்ணா: முஹு: அஹிபதி சூடா மௌளிரத்ந அபிகாதாத் பரிணத லகிமாந: பாதஸாம் ஊர்மய: தே

அசுரர்களை அழித்த க்ருஷ்ணனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னைச் சிவன் அடிக்கடி வணங்கிச் சேவிக்கிறார். அப்போது அவரது தலையில் உள்ள உயர்ந்த நாகத்தின் இரத்தினக் கல்லானது, அவரது தலையில் உள்ள கங்கை நீரை மோதுகிறது. இதனால் அந்த நீர் உன் மீது சிறிதுசிறிதாக விழுகிறது. இதனைக் காணும்போது உன்னை அர்க்ய நீர் விட்டு ஆராதிப்பது போன்று உள்ளது.