Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 47)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

ச்ருதிசரஸி நிகூடம் கர்மணாம் சோதிதாநாம் த்வதவதி விநிவேசம் ந அதிகந்தும் க்ஷமாணாம் பரிஹஸதி முராரே: பாதுகே பாலிசாநாம் பசுவத பரிசேஷாத் பண்டித: நாம யஜ்ஞாந்

முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! சாஸ்திரங்களில் கூறப்பட்ட யாகம் முதலான பல கர்மங்களை இயற்றிய பின்னர், அவற்றைப் பாதுகையான உன்னிடம் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று உபநிஷத்துக்கள் மறைமுகமாகக் கூறுகின்றன. இது தெரியாத அஜ்ஞானம் நிரம்பிய மூடர்கள் இயற்றும் யாகங்கள் அனைத்தும் எந்தப் பயனும் அளிக்காமல் உள்ளன. அந்த யாகங்களில் எஞ்சி உள்ளது பசுவதை மட்டுமே என்று வேதம் அறிந்தவன் பரிகாசம் செய்கிறான்.

நாம் செய்யும் கர்மங்களை “ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணம்” என்று கூறி நிறைவு செய்வதைக் காண்கிறோம். இது போன்று சாஸ்திரங்களில் கூறப்பட்ட யாகம் முதலியவற்றை “ஸர்வம் க்ருஷ்ண பாதுகார்ப்பணம்” என்று கூறவேண்டும் என்றார்.