Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 45)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

ஸக்ருதபி கில மூர்த்நா சார்ங்கிண: பாதுகே த்வாம் மநுஜம் அநுவஹந்தம் தேஹபந்த வ்யபாயே உபசரதி யதார்ஹம் தேவவர்க்க: த்வதீய ஸ து நியமிதப்ருத்ய: ஜோஷம் ஆஸ்தே க்ருதாந்த:

சார்ங்கம் என்னும் வில்லை உடைய நம்பெருமாளின் பாதுகையே! உன்னை ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது தலையில் ஏற்றால் போதுமானது. அந்த மனிதனின் உடல் தரையில் விழும் காலத்தில் உனது வேலையாட்களான நித்யசூரிகள், அவனைச் சரியானபடி உபசாரம் செய்து அழைத்துப்போகின்றனர். இதனைக் காணும் யமன் தனது தூதர்களை அடக்கியபடி அங்கிருந்து மௌனமாகத் திரும்பி விடுகிறான்.

சடாரியைத் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது தலையில் ஏற்பவர்களை யமன் திரும்பிப்பார்க்கவும் அஞ்சுவான் என்று கருத்து. அவர்களுக்கு மீண்டும் ஸம்ஸார சுழற்சி என்பதே இல்லை.