Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 44)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பதகமல ரஜோபி: வாஸிதே ரங்கபர்த்து: பரிசத நிகமாந்தே பாதுகே தாரயந்த: அவிதித பரிபாகம் சந்த்ரம் உத்தம்ஸயந்தே பரிணத புவனம் தத் பத்மம் அத்யாஸதே வா
ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் உள்ள தூசிகளால் பாதுகை முழுவதும் தெளிக்கப்பட்ட நறுமணமானது வீசியபடி உள்ளது. மேலும் அந்தப் பாதுகைகள் உபநிஷத்துக்களை உடையதாகவும் உள்ளது. இப்படிப்பட்ட உயர்ந்த பாதுகைகளைத் தங்கள் தலையில் ஏற்றுக் கொள்பவர்கள் நிலை என்ன? அவர்கள் - வளர்வதையும் தேய்வதையும் இயல்பாக உடைய சந்திரனைத் தலையில் சூட்டிக் கொள்ளும் பதவியையோ அல்லது தாமரை மலரில் அமர்ந்து உலகைப் படைக்கும் பதவியையோ பெறுகிறார்கள்.
இங்கு தலையில் சந்திரனைச் சூடும் பதவி என்பது சிவன் பட்டமாகும். தாமரையில் அமர்வது என்பது ப்ரம்ம பட்டமாகும்.ஒரு ஐயம் ஏற்படலாம். பாதுகைகள் இவ்விதம் அற்பமான பலன்களான பதவிகளையும் அளிக்குமா? இதற்கான காரணத்தையும் கூறுகிறார். நம்பெருமாளின் திருவடிகளில் உள்ளதால் பாதுகாதேவிக்கு ரஜஸ் உண்டாகி, இவ்விதம் செய்கிறாள் என்றார். ரஜஸ் என்றால் ரஜோ குணத்தையும் குறிக்கும், தூசிகளையும் குறிக்கும். இதனை ச்லேடையாகக் கூறுகிறார்.