Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 43)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
அம்புநி அம்புநிதே: அநந்யகதிபி: மீநை கியத் கம்யதே க்லேசேநாபி கியத் வ்யலங்கி ரபஸ உத்துங்கை: ப்லவங்கேச்வரை: விஜ்ஞாதா கியதீ புந: க்ஷிதிப்ருதா மந்தேந கம்பீரதா கிம்தை: கேசவ பாதுகா குண மஹாம்போதே: தடஸ்தா வயம்.
நீரைத் தவிர வேறு இடங்கள் உயிர் வாழ இயலாத மீன்கள் கூட கடலில் ஓரளவு மட்டுமே செல்ல இயலும். வேகத்தில் சிறந்தவர்களான அனுமான் முதலானவர்கள் கூட கடலில் ஓரளவு மட்டுமே தாண்டிச் செல்ல இயன்றது; அதற்கே மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. திருப்பாற்கடலைக் கடைந்தபோது மந்தரமலை அந்தக் கடலின் ஆழத்தை ஓரளவு மட்டுமே கண்டது. அவற்றைப் பற்றி நமக்கு என்ன? நம்பெருமாளுடைய பாதுகைகளின் குணங்கள் பெரிய ஸமுத்திரம் போன்று உள்ளது. மற்றவற்றைப்போல் அல்லாமல் நாம் அதன் கரையிலேயே அல்லவா நின்று கொண்டிருக்கிறோம்?
தங்களால் ஆழம் காண இயலாது என்று அறிந்த மீன்கள், எப்படியாவது கடலின் ஆழத்தைக் கண்டு பிடிக்கவேண்டும் என்று வீண் முயற்சி செய்தபடி உள்ளன. அக்கடலின் நீள அகலங்களை அறியவேண்டும் என்று சிலர், தங்களை அனுமனாக எண்ணிக்கொண்டு வீண் முயற்சி செய்தபடி உள்ளனர்.நாம் இது போன்று செய்யவேண்டாம் - காரணம் நம்பெருமாளின் பாதுகைகளுக்கு உள்ள குணங்கள் ஸமுத்திரத்தை விட ஆழமானது என்று நாம் அறிவோம். அப்படி உள்ளபோது அவற்றை நாம் வர்ணித்துவிடுவோம் என்று ஏன் வீண் முயற்சி செய்யவேண்டும்?