Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 41)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
பத்மா காந்த பத அந்தரங்க விபவ உத்ரிக்தம் பதத்ரம் பஜே யத் பக்த்யா நமதாம் த்ரிவிஷ்டபஸதாம் சூடாபதேஷு அர்பிதம் நித்ய ஆபீத நக இந்து தீதிதி ஸுதா ஸந்தோஹம் உச்சை: வமதி அந்த: நூநம் அமாந்தம் அந்திக லஸத் சேஷாபட சத்மநா
தாமரையில் அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாயகியின் நாயகனான நம்பெருமாள் திருவடிகளுடன் சிநேகமாக உள்ளதால் பாதுகை மிகவும் உயர்ந்துள்ளது. அவற்றை நான் வணங்குகிறேன். கோயில்களில் தலை வணங்கி நிற்கும் தேவர்களுக்குச் சடாரி வைக்கப்படும்போது, முதலில் அவர்கள் தலையில் பரிவட்டம் என்ற வெண்மையான பட்டாடை கட்டியபின் சடாரி வைக்கின்றனர். இது எப்படி உள்ளது? நம்பெருமாளின் திருவடி நகங்கள் சந்திரனைப் போன்று குளிர்ந்த கதிர்களை வீசியபடி உள்ளன. அந்த அமிர்தத்தைப் பருகிய பாதுகைகள், அந்த வெண்மையான அமிர்தத்தைக் கக்குவது போல் உள்ளது.
கடந்த ச்லோகத்தில் தேவர்கள் பாதுகையைத் தலையில் ஏற்கும் மனிதனைக் கண்டு அச்சம் கொள்வதாகக் கூறினார். அந்த அச்சத்தை நீக்க, தேவர்கள் தாங்களும் விரைவாக நம்பெருமாளின் திருமுன்பாக நின்று, சடாரியைத் தலையில் ஏற்கின்றனர். இதனால் அவர்களின் பதவியைப் பற்றிய அச்சம் நீங்குகிறது.