Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 39)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
யோஷித்பூத த்ருஷந்தி அபோட சகட ஸ்தேமாநி வைமாநிக ஸ்ரோதஸ்விநீ உபலம்பநாநி பஸித் உதஞ்சத் பரீக்ஷிந்தி ச தூத்யாதிஷ்வபி துர்வசாநி பதயோ: க்ருத்யாநி மத்வேவ யத் தத் தே தத் ப்ரணயம் தத் ஏவ சரணத்ராணம் வ்ருணே ரங்கிண:
நம்பெருமாளின் திருவடிகள் எப்படிப்பட்டவை - கல்லாகக் கிடந்த அகலிகையைப் பெண்ணாக மாற்றியவை; பலம் வாய்ந்த சகடாசுரனை உதைத்து அழித்தவை; த்ரிவிக்ரம அவதாரத்தில் வானம் வரை அளந்து, கங்கையை உண்டாக்கியவை; சாம்பலில் இருந்து பரீக்ஷத் அரசனை உண்டாக்கியவை; பாண்டவர்களுக்காகத் தூது சென்றவை ஆகும். இப்படிப்பட்ட பல குணங்களை வெளிப்படுத்திய திருவடிகளுடன் எப்போதும் பாதுகைகள் சினேகத்துடன் பிரியாமல் உள்ளன. இப்படியாக நம்பொருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! எனக்கு மேன்மை ஏற்பட அருள்வாயாக.
ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு திருக்கல்யாண குணம் வெளிப்படுவதைக் காணலாம். இதில் பாண்டவர்களுக்காகத் தூது சென்ற ஸௌலப்யம் மிகவும் போற்றத்தக்கது. அது போன்று அந்தத் திருவடிகளைத் தன்னிடம் அழைத்து வந்து, தனக்கு மேன்மை அளிக்கவேண்டும் என்றார்.