Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 37)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

பக்தி ப்ரஹ்வ புரப்ரபஞ்ஜந ஜடாவாடீ ஸநீட ஸ்புரத் சூடாரக்வத வாஸநா பரிமள ஸ்த்யாநே ஸ்தும: பாதுகே ரங்கக்ஷோணிப்ருத் அங்கிரிபத்மயுகளீ பூர்ண ப்ரபத்தே: பலம் நிச்சிந்வந்தி விபச்சித: சமதநா: நித்யம் யதுத்தம்ஸநம்

திரிபுராஸுரன் என்ற அரக்கனை அழித்த சிவன், தனது சிரஸில் எப்போதும் உன்னைத் (பாதுகை) தரித்தவனாகவே உள்ளான். உன் மீது உள்ள பக்தியால் இவ்வாறு வணங்கியபடி உள்ளான். இதனால் அவன் ஜடாமுடியில் சூடியுள்ள கொன்றை மலர்களின் வாசம், பாதுகையில் எப்போதும் வீசியபடி உள்ளது. இதனால் மகிழ்ந்த பாதுகை, பருமனாக உள்ளது. இப்படிப்பட்ட பாதுகையை நாம் வணங்குகிறோம். இந்த்ரியங்களை அடக்கத் தெரிந்தவர்களான வித்வான்கள் செய்வது என்ன? பாதுகையைத் தங்கள் சிரஸில் தாங்கியபடி உள்ளனர். அவர்கள், “ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் அடைக்கலம்”, என்று தங்கள் மனம் மற்றும் வாக்கினால் கூறுவதற்கு ஏற்ற பயன் இதுவே என்று எண்ணுகின்றனர்.

இராமாயணத்தில் பாதுகையின் பெருமையைப் பற்றிக் கூறியவர், இங்கு அதனைத் தங்கள் தலைகளில் ஏற்பது பற்றிக் கூறுகிறார். நம்பெருமாளின் அடியார்கள் எப்போதும் தங்கள் தலையில் அவனது பாதுகையை ஏற்பதையே விரும்புவர் என்றார்.