Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 35)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
அல்பச்ருதைரபி ஜநை: அநுமீயஸே த்வம் ரங்கேசபாது நியதம் நிகம் உபகீதா ஸாரம் ததர்த்தம் உபப்ருஹ்மயிதும் ப்ரணீதம் ராமாயணம் தவ மஹிம்நி யத: ப்ரமாணம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் சிறிய அளவே வேதத்தைப் பற்றி அறிந்தவர்கள் கூட, “பாதுகையைப் பற்றி வேதத்திலே கூறப்பட்டுள்ளது”, என்று கூறுகின்றனர். இது எப்படி சாத்தியம்? வேதங்களின் முழு அர்த்தங்களை வெளிப்படுத்தும் விதமாக உள்ள இராமாயணத்தில் உனது பெருமைகள் பல இடங்களில் கூறியுள்ளதால் ஆகும்.
வேதங்களை ஓரளவு அறிந்தவர்கள் என்ன நினைக்கின்றனர் என்றால், “பாதுகையைப் பற்றி வால்மீகி முனிவர் இராமாயணத்தில் மிகவும் பரக்கப் பேசியுள்ளார். வால்மீகியைப் போன்றவர்கள் எந்த ஒரு கருத்தைக் கூறுவதாக இருந்தாலும், அந்தக் கருத்து வேதத்தில் கூறப்பட்டிருந்தால் மட்டுமே கூறுவார்கள். ஆக, பாதுகையைப் பற்றி இவர் கூறுவதன் மூலம், இதனைப் பற்றி வேதங்களின் நிச்சயமாகக் கூறப்பட்டிருக்கும்”, என்பதாகும். /////