Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 34)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

ப்ரத்யக்ஷயந்தி பரிசுத்ததிய : யதாவத் ராமாயணே ரகுபுரந்தர பாதரக்ஷே சச்வத் ப்ரபஞ்சிதம் இதம்பரயைவ வ்ருத்த்யா ஸம்க்ஷேப விஸ்தரதசாஸு தவ அநுபாவம்

ஸ்ரீராமனின் பாதுகையே! ஸ்ரீமத் இராமாயணத்தில் பல இடங்களில் உனது பெருமைகள் சுருக்கமாகவும் விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. தெளிந்த அறிவை உடையவர்கள் இவற்றை உணர்கின்றனர். அவர்கள் உனது பெருமையை இவற்றின் மூலம் கண்ணால் காண்பது போன்று தெளிவாக அறிகின்றனர்.

பதினான்கு ஆண்டுகள் ஸ்ரீராமனின் சிம்ஹாஸனத்தில் வீற்றிருந்து, அவனுக்கும் மேலாக இந்த உலகத்தைப் பாதுகைகள் ஆண்டன என்பதை அந்தக் காலகட்டத்தில் இருந்தவர்கள் கண்டனர் என்றார். அதனையே இராமாயணம் கூறுகிறது என்றார்.