Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 33)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
வேத உபப்ருஹ்மண குதூஹலிநா நிபத்தம் விச்வம்பரா ச்ருதிபவேந மஹர்ஷிணா யத் வ்யாஸேந யத் ச மதுஸூதந பாதரக்ஷே த்வே சக்ஷுஷீ த்வதுநுபாவம் அவேக்ஷிதும் ந:
மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் பாதுகையே! வேதங்களின் உண்மையான பொருளை உணர்ந்து கொள்வதில் சிரமம் அதிகம் ஆகும். அப்படிப்பட்ட வேதத்தின் பொருளை உலகிற்கு உணர்த்த எண்ணிய வ்யாஸ பகவான் மஹாபாரதத்தையும், வால்மீகி மஹரிஷி இராமாயணத்தையும் அருளிச்செய்தனர். இவை இரண்டும் பாதுகையாகிய உனது பெருமைகளை நாங்கள் காண்பதற்கு ஏற்ற இரு கண்கள் போன்று உள்ளன.
இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டிலும் பாதுகையின் பெருமை எவ்விதம் கூறப்பட்டது? இராமாயணத்தில் இராமனின் பாதுகைகளைப் பரதன் தனது தலையில் தாங்கி அயோத்தி வந்தான். மஹாபாரதத்தில் க்ருஷ்ணனின் பாதுகைகளை உத்தவர் தனது தலையில் ஏற்று பத்ரிகாச்ரமம் வந்தார்.