Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 31)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

வந்தே தத் ரங்கநாதஸ்ய மாந்யம் பாதுகயோ: யுகம் உந்நதாநாம் அவநதி: நதாநாம் யத்ர ச உந்நதி:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகளை வணங்காமல் உள்ளவர்களுக்குத் தாழ்வான நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் அந்தப் பாதுகைகளைப் போற்றி, வணங்குபவர்களுக்கு மிகவும் உயர்ந்த நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட அந்த இரண்டு பாதுகைகளையும் நான் வணங்குகிறேன்.

பாதுகைகளை அணிவதில் திருவரங்கனுக்கு மகிழ்வே ஆகும். எப்படி என்றால் இதனை தன்னுடைய திருவடிகளில் சேர்த்துக்கொள்ள குனிந்து பார்க்கிறான். தொடர்ந்து பாதுகைகளை அணிந்து கொள்கிறான். அதன் பின்னர் முன்னை விடச் சற்று அதிகமாக உயர்ந்து நிற்கிறான். ஆக, பாதுகையால் உயர்த்தி உள்ளது அல்லவா? ஆகவே திருவரங்கனையே உயர்த்தும் மேன்மையும் பாதுகைக்கு உண்டு எனலாம்.