Sri Paduka Sahasram - Paththati 2 - ஸாமாக்ய பத்ததி (ச்லோகம் 30)
Paththati 2 - ஸாமாக்ய பத்ததி
சடகோப இதி ஸமாக்யா தவ ரங்கதுரீண பாதுகே யுக்தா ஸூதே ஸஹஸ்ரம் ஏவம் ஸூக்தி: ஸ்வயம் ஏவ யத் மயா பவதீ
நம்பெருமாளின் திருவடிகளைக் காக்கும் பாதுகையே! நீ என் மூலமாக ஆயிரம் ச்லோகங்கள் உண்டு பண்ணினாய். நம்மாழ்வார் திருவரங்கன் மீது ஆயிரம் பாசுரங்கள் இயற்றினார். இந்தப் பொருத்தம் காரணமாக உன்னைச் சடாரி என்றும், சடகோபன் என்றும் அழைத்தனர் போலும்.
கடந்த ச்லோகத்தில் பாதுகையும் நம்மாழ்வாரும் ஒன்றே என்றார். இதற்குச் சிலர், “நம்மாழ்வார் நம்பெருமாள் மீது ஆயிரம் பாசுரங்கள் அருளிச் செய்தார். பாதுகையோ அவ்விதம் ஏதும் செய்யவில்லை. அப்படி உள்ளபோது எவ்வாறு பாதுகையும் நம்மாழ்வாரும் ஒன்று எனலாம்?”, என்று ஆட்சேபம் செய்தனர்.இதற்கு ஸ்வாமி தேசிகன் இந்தச் ச்லோகம் மூலம் விடை அருளிச் செய்தார் - இந்தப் பாதுகா ஸஹஸ்ரத்தை நான் இயற்றவில்லை. பாதுகையே இயற்றியது. ஆக பாதுகையை நம்மாழ்வார் பெயரிட்டு சடகோபன் என்று அழைப்பது சரியே - என்றார்.