Sri Paduka Sahasram - Paththati 2 - ஸாமாக்ய பத்ததி (ச்லோகம் 29)
Paththati 2 - ஸாமாக்ய பத்ததி
விந்த்யஸ்தம்பாத் அவிஹதகதே: விஷ்வக் ஆசாந்த ஸிந்தோ: கும்பீஸூநோ: அஸுர கபல க்ராஸிந: ஸ்வைரபாஷா நித்யம் ஜாதா சடரிபுதநோ: நிஷ்பதந்தீ முகாத் தே ப்ராசீநாநாம் ச்ருதி பரிஷதாம் பாதுகே பூர்வகண்யா.
அகஸ்தியர் என்ற முனிவர் விந்திய மலையை அடக்கினார். தான் ஆசமனம் செய்வதற்காக ஸமுத்திரத்தின் நீரை முழுவதுமாக உட்கொண்டார். வாதாபி என்ற அசுரனைத் தனது ஆகாரமாக உட்கொண்டார். இப்படிப்பட்ட அகஸ்திய முனிவர் தனக்கு இஷ்டமான மொழியாகத் தமிழைக் கொண்டிருந்தார். அப்படி இருந்தபோதும், எப்போதும் இருக்கும் மொழி என்ற போதும், அந்த மொழி ஸம்ஸ்க்ருதம் போன்று பெரும் புகழ் பெறாமல் இருந்தது. ஆனால் நம்மாழ்வாராகத் தோன்றிய உனது (பாதுகை) திருவாய் மூலம் வெளிப்பட்ட திருவாய்மொழியால் நிகழ்ந்தது என்ன? தமிழ்மொழியானது வேதத்திற்கும் முந்தைய காலத்தியது என்று எண்ணும்படி ஆனது.
இராமாயண காலத்திலேயே அகஸ்த்தியர் இருந்தார் என்பதை அவருடைய பெயரானது வால்மீகி இராமாயணத்தில் இடம் பெற்றுள்ளதன் மூலம் அறியலாம். ஆக தமிழும் அப்போதே இருந்தது என்னும் அறியலாம்.இப்படி உயர்ந்த தமிழ் மொழியை திருவரங்கன் மேலும் கௌரவித்தபடி இப்போதும் உள்ளான். எப்படி? திருவரங்கன் திருவீதி உலா வரும்போது முதலில் பிரபந்த கோஷ்டி செல்கிறது. அந்தத் தமிழின் பின்னே அல்லவா நம்பெருமாள் செல்கிறான்? அவனைப் பின் தொடர்ந்து வேதங்கள் வருகின்றன. தமிழுக்கு இந்த ஏற்றம் நம்மாழ்வாரால் வந்தது.இங்கு நம்மாழ்வாரும் பாதுகையும் ஒன்றே எனக் கூறுவது காண்க.