Sri Paduka Sahasram - Paththati 2 - ஸாமாக்ய பத்ததி (ச்லோகம் 28)

Paththati 2 - ஸாமாக்ய பத்ததி

பத்யேந தேவி சடகோப முநி: தவ ஆஸீத் தஸ்ய அபி நாமவஹநாத் மணி பாதுகே த்வம் சேஷீ பபூவ யுவயோரபி சேஷசாயி சேஷம் த்வசேஷம் அபி சேஷ பதே ஸ்திதம் வ:

உயர்ந்த இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட அரங்கனின் பாதுகையே! உன்னைக் குறித்து நம்மாழ்வார் பாசுரங்கள் இயற்றியதால் உனக்குத் தொண்டனாக அவர் உள்ளார். அவருடைய திருநாமத்தை வைத்துக் கொண்டதால் அவருடைய அடிமை போன்று நீ உள்ளாய். ஆதிசேஷன் மீது சயனித்தபடி உள்ள பெரியபெருமாள் உங்கள் இருவருக்கு மட்டும் அல்லாமல் அனைத்து உலகிற்கும் எஜமானனாக உள்ளான். ஆகவே இந்த உலகம் முழுவதும் உங்கள் மூன்று பேருக்கும் அடியவர்களாக உள்ளனர்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் “சுடர் அடி தொழுது” என்று உன்னைப் பாடினார். நீயோ அவரது திருநாமத்தை வைத்துக் கொண்டுள்ளாய். இப்படியாக உனக்கு அவர் அடிமையாகவும், நீ அவருக்கு அடிமையாகவும் உள்ளீர்கள். உங்கள் இருவரின் எஜமானனாக அழகிய மணவாளன் உள்ளான்.