Sri Paduka Sahasram - Paththati 2 - ஸாமாக்ய பத்ததி (ச்லோகம் 27)
Paththati 2 - ஸாமாக்ய பத்ததி
சய்யாத்மநா மதுரிபோ: அஸி சேஷபூதா பாதாச்ரயேண ச புந: த்விகுணீக்ருதம் தத் பூயோபி பாகவத சேஷதயா தத் ஏவ வ்யங்க்தும் பதாவநி சடாரி பதம் பிபர்ஷி
நம்பெருமாளின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மது என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணன் சயனிக்கும் படுக்கையாக நீ உள்ளதால் அவனுக்குத் தாஸியாக உள்ளாய். மேலும் தணிந்து, அவனது திருவடிகளை அண்டி நிற்பதால், உன்னுடைய அடிமைத்தனம் இரண்டு மடங்கானது. இத்தகைய பகவத் சேஷத்வத்தை விட, பாகவத சேஷத்வம் மிகவும் உயர்ந்தது என்று உலகிற்குப் ப்ரகாசமாக உணர்த்த விரும்பி, நம்மாழ்வாரின் திருநாமமான சடாரி என்ற பெயரைச் சூட்டிக் கொண்டாய் போலும்.
பாகவத சேஷத்வத்தின் எல்லை நிலமாக நம்மாழ்வார் இருந்தார். நீ அவருக்கும் அடிமையாக நின்று, சேஷத்வத்தின் எல்லையாக மாறிவிட்டாய்.