Sri Paduka Sahasram - Paththati 2 - ஸாமாக்ய பத்ததி (ச்லோகம் 26)

Paththati 2 - ஸாமாக்ய பத்ததி

ய: ஸப்தபர்வ வ்யவதான அதுங்காம் சேஷத்வ காஷ்டம் அபஜத் முராரே: தஸ்யாபி நாமோத்வஹநாத் த்வயா அஸௌ லகூக்ருத: அபூத் சடகோப ஸூரி:

முரன் என்ற அசுரனை அழித்த க்ருஷ்ணனின் ஏழு பக்தர்களைக் கடந்து, தான் எட்டாவது பக்தராக உள்ள உயர்வை நம்மாழ்வார் அடைந்தார். அவருடைய பெயரை, நீ அவருக்குப் பின்னால் வந்து வைத்துக் கொண்டதால் எட்டாவது நிலையில் நீ உள்ளாய். இதனால் நீ அவரை விட உயர்ந்து, அவர் உன் முன்பு தாழ்ந்தவர் ஆனார்.

இங்கு திருவாய்மொழியில் (3.7.10) நம்மாழ்வார் - அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் - என்று ஏழு அடியார்களுக்குத் தன்னை அடியாராகக் கூறிக்கொண்டார். நீ உன்னை அவருக்கும் அடியாராக எட்டாவது இடத்தில் அமைத்துக் கொண்டாய். இதனால் அவர் உன்னைவிட ஒரு படி தாழ்ந்தவராகி விட்டார்.