Sri Paduka Sahasram - Paththati 2 - ஸாமாக்ய பத்ததி (ச்லோகம் 23)
Paththati 2 - ஸாமாக்ய பத்ததி
நியதம் மணி பாதுகே ததாந: ஸ முநி: தே சடகோப இதி அபிக்யாம் த்வத் உபாச்ரித பாத ஜாத வம்ச ப்ரதிபத்யை பரம் ஆததாந ரூபம்
இரத்தினக் கற்களால் பதிக்கபெற்ற பாதுகையே! நீ அடைந்துள்ள நம்பெருமாளின் திருவடிகளிலிருந்து உண்டான சூத்திரவம்சத்தில் நம்மாழ்வார் தோன்றினார். உன் மீது கொண்டுள்ள உயர்ந்த பக்தியை உணர்த்தவே, அவர் சடடோபன் என்ற திருநாமத்தை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே அவர் அந்தப் பிறப்பில் அவதரித்தார்
பகவானின் திருவடிகளில் இருந்து தோன்றியது பூமியும் சூத்திரர்களும் ஆகும். பூமி அனைவரது கர்மமும் இயற்ற அடிப்படையாக இருந்து உதவுகிறது. இது போன்று சூத்திரர்களும் அனைத்து வர்ணத்தினருக்கும் உதவுகின்றனர். இந்தக் குலத்தில் தோன்றிய நம்மாழ்வார், அந்தணர்களுக்கு திருவாய்மொழியைக் கொடுத்து உதவினார். இதன் மூலம் அந்தக் குலத்தை கௌரவப்படுத்தினார்.மற்ற வர்ணங்கள் பாதுகையின் தொடர்பில்லாத அவயவங்களில் (எம்பெருமானின் உறுப்புகள்) தோன்றியதால் அவை தாழ்ந்தவையே. இந்தக் குலத்திற்கு மட்டுமே பாதுகையின் தொடர்பு உள்ளதால், மற்ற வர்ணத்தைவிட இது உயர்ந்ததே ஆகும் - என்பதன் மூலம் இந்தக் குலத்திற்கு கௌரவம் அளித்தார்.