Sri Paduka Sahasram - Paththati 2 - ஸாமாக்ய பத்ததி (ச்லோகம் 22)
Paththati 2 - ஸாமாக்ய பத்ததி
த்ரமிட உபநிஷத் நிவேச சூந்யாந் அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந் த்ருவம் ஆவிசதி ஸ்ம பாதுகாத்மா சடகோப: ஸ்வயம் ஏவ மாநநீய:
அனைவராலும் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர் நம்மாழ்வார் ஆவார். ஏன்? அவர், அனைவரும் பெரியபெருமாளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் திருவாய்மொழியை அருளிச் செய்தார். ஆயினும் அதனை அறிய இயலாதவர்களும் பகவானை அடைய ஏதுவாக, தானே சடாரியாக, பாதுகையாக அவதரித்தார் என்பது உறுதியே.
வேதங்களைக் கற்க இயலாதவர்களுக்காக, அந்த வேதங்கள் என்னும் பழங்களைப் பிழிந்து, அதன் சாறாக திருவாய்மொழியை அருளிச்செய்தார். இத்தகைய உயர்ந்த திருவாய்மொழியையும் கற்க இயலாதவர்களைக் கரையேற்ற என்ன வழி என்று நம்மாழ்வார் சிந்தித்தார். பின்னர், தானே சடாரியாக, பாதுகையாக அவதரித்தார். இதன் மூலம் அனைவரின் தலைகளிலும் படும்படி நின்று, அவர்களுக்கு பகவத் அனுபவம் கிட்டும்படிச் செய்தார்.