Sri Paduka Sahasram - Paththati 2 - ஸாமாக்ய பத்ததி (ச்லோகம் 21)

Paththati 2 - ஸாமாக்ய பத்ததி

வந்தே விஷ்ணுபத ஆஸக்தம் தம் ருஷிம் தாம் ச பாதுகாம் யதார்த்தா சடஜித் ஸம்ஜ்ஞா மத் சித்த விஜயாத் யயோ:

சடகோபன் என்னும் நம்மாழ்வார், பாதுகை ஆகிய இருவருமே நம்பெருமாளின் திருவடிகள் மீது மிகுந்த ஆசை கொண்டுள்ளனர். இவர்களை நான் வணங்குகிறேன். இவர்கள் இருவருக்குமே சடாரி என்னும் திருநாமம், எனது மனதை வென்றதன் மூலம் அர்த்தம் கொண்டதாக ஆனது.

பாதுகை, நம்மாழ்வார் என்ற இருவருக்கும் சடாரி, சடகோபன் என்ற திருநாமங்கள் வந்தன. சடம் என்ற வாயுவை வென்றதால் சடகோபன் என்றும், சடர்கள் (மூடர்கள்) என்பவர்களைத் திருத்தி அரங்கன் பணியில் ஈடுபடுத்துவதால் சடகோபன் என்றும் கூறப்படுகிறார். பாஞ்சராத்ர சம்ஹிதையில் சடன் என்ற அசுரனை அழிப்பதற்காக, பாதுகை இந்த உலகிற்கு வந்ததாகக் கூறப்பட்டதால் அதற்கு சடாரி என்ற பெயர் உண்டு. என்னிடம் உள்ள துர்குணங்களை விலக்குவதாலும் இந்தப் பெயர்கள் இவர்களுக்குப் பொருந்தும்.