Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 20)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

த்வயி விஹிதா ஸ்துதிரேஷா பதரக்ஷிணி பவதி ரங்கநாதபதே ததுபரி க்ருதா ஸபர்யா நமதாம் இவ நாகிநாம் சிரஸி

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! பெருமாளின் திருவடிகளில் செய்யப்படும் பூஜையானது தேவதைகளின் தலையில் சென்று சேர்ந்துவிடுகிறது. இதே போன்று நான் உன்னைத் துதித்து இயற்றும் இந்தச் ஸ்லோகங்கள் அனைத்தும் பகவானின் திருவடிக்கும் சென்று சேர்கிறது.

பகவானின் திருவடிகளை அண்டுவதை விடுத்து சிலர் மற்ற தேவதைகளை நாடுவதுஉண்டு. இதுபோல் அல்லவா இவர் செயல் உள்ளது - பகவானின் திருவடி மீது துதி பாடாமல் பாதுகையின் மீது இயற்றுகிறாரே? இதற்கு விடை தருகிறார் - பாதுகை மீது இயற்றிய துதி,அவன் பாதங்களைச் சென்று அடையும் என்கிறார். எப்படி என்பதற்கு உதாரணம் கூறுகிறார். ஒரு முறை சிவனுக்காக இயற்ற வேண்டிய பூஜையை க்ருஷ்ணனின் திருவடிகளில் அர்ஜுனன் செய்தான். அப்போது அந்த மலர்கள் சிவனின் தலைமுடியைச் சென்று அடைந்தன. இதுபோன்று பாதுகைக்குச் செய்யும் துதிகள் திருவடிகளுக்கும் பொருந்தும்.