Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 18)
Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி
அபார கருணாம்புதே: தவ கலு ப்ரஸாதாத் அஹம் விதாதும் அபி சக்நுயாம் சதஸஹஸ்ரிகாம் ஸம்ஹிதாம் ததாபி ஹரிபாதுகே தவ குண ஔக லேச ஸ்திதே: உதாஹ்ருதி: இயம் பவேத் இதி மிதாபி யுக்தா ஸ்துதி:
ஸ்ரீஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! நீ எல்லையற்ற கருணைக் கடலாக உள்ளாய். இதன் மூலம் உன் மீது பல லட்சம் ஸ்லோகங்கள் என்னால் இயற்ற முடியும். ஆயினும் இத்தனை லட்சம் ஸ்லோகங்களும் உன்னைப் பற்றி முழுமையாகக் கூற இயலாமல் இருக்கும். எனவே உதாரணமாக இங்கு சில ஆயிரம் மட்டுமே போதுமானது என்று முடிவு செய்தாய் போலும்.
பாதுகை ஸ்வாமியிடம், “எத்தனை ச்லோகங்கள் என் மீது இயற்றுவதாக நீ சபதம் மேற்கொண்டாய்?”, என்றாள். அதற்கு ஸ்வாமி, “1000 ச்லோகங்கள்”, என்றார். உடனே பாதுகை சற்று பரிகாசமாக, “உம்மால் அவ்வளவுதான் இயலுமோ?”, என்று கேட்டாள். அதற்கு ஸ்வாமி, “நம்பெருமாளின் பாதுகையே! உன்னைப் பற்றி உனது அருள் காரணமாக, அடியேனால் ஒரு லக்ஷம் ச்லோகங்கள் கூட இயற்ற இயலும். நீ அனுமதி அளித்தால் செய்கிறேன்”, என்றார். இதனைக் கேட்ட பாதுகை, “என்னைப் பற்றி நீ உதாரணமாக உள்ள சிலவற்றை மட்டும் எழுதினால் போதுமானது”, என்றாள்.