Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 17)
Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி
வ்ருத்திபி: பஹுவிதாபி: ஆச்ரிதா வேங்கடேச்வரகவே: ஸரஸ்வதீ அத்ய ரங்கபதி ரத்ந பாதுகே நர்த்தகீவ பவதீம் நிஷேவதாம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை உயர்ந்த இரத்தினக் கற்கள் கொண்டு இழைக்கப்பட்டவளாக அலங்கரிக்கும் பாதுகையே! நாட்டியம் ஆடுபவள் எவ்வாறு பலவித பாவங்களை வெளிப்படுத்துவாளோ, அது போன்று வேங்கடேசன் என்ற கவி மூலம் வெளிப்படும், உன்னைப் பற்றிய பலவிதமான புகழாரங்கள் அடங்கிய சொற்கள், உன்னை வணங்கிச் சேவிக்கவேண்டும்.
பொதுவாக நாட்டியம் ஆடும்போது, மஹாராணியை அழைத்து அமர வைப்பார்கள். அந்த மஹாராணி முன்பாக நாட்டிய நிகழ்ச்சி நடைபெற, அதனைக் கண்டு மஹாராணி மனம் மகிழ்ந்து இரசிப்பாள். இங்கு பாதுகையை மஹாராணியாக அமரவைக்கிறார். அந்தப் பாதுகை முன்பாக நாட்டியம் ஆடுபவள் போன்று தன்னை எண்ணிக் கொள்கிறார். நடனம் ஆடுபவள் பல அபிநயங்களைப் பிடிப்பது போன்று, இவர் பாதுகையைப் பற்றிய பல விவரங்களை வெளிப்படுத்துகிறார். அந்தச் சொற்கள் அனைத்தும் பாதுகையை வணங்கி நிற்கவேண்டும் என்று கூறுகிறார். இவ்விதம் பாதுகை தன்னுடைய சொற்களைக் கேட்டு மகிழ்ந்து அமர்வதாகக் கூறுகிறார்.