Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 16)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

அநிதம் ப்ரதமஸ்ய சப்தராசே: அபதம் ரங்கதுரீண பாதுகே த்வாம் கத பீதி: அபிஷ்டுவந் விமோஹாத் பரிஹாஸேந விநோதயாமி நாதம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எப்போது உண்டானவை என்று கூற இயலாதபடி எக்காலத்திலும் இருந்து வரும் வேதங்கள் கூட உன்னை முழுவதுமாகக் கூறி முடிக்க இயலாது. இப்படிப்பட்ட உன்னை, எனது அறியாமை காரணமாக, பயம் சிறிதும் இன்றி ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கிவிட்டேன். இதன் மூலம் ஸ்ரீரங்கநாதன் மனம் மகிழ்ந்து புன்முறுவல் செய்கிறான் (நான் அவனை மகிழ்விக்கிறேன்).

நம்பெருமாளின் வீரங்களைக் குறித்து புகழ்வது போன்று, அவனது ஹாஸ்யரஸம் வெளிப்படுத்த எண்ணுவதும் அவனுக்குச் செய்யும் கைங்கர்யமே ஆகும். இதனால் நிகழ்வது - இந்த முழு ஸ்லோகத்தைக் கண்ட ஸ்ரீரங்கநாதன் மற்றவர்களைப் பார்த்து, “இது போல் உங்களால் இயற்ற இயலுமா?”, என்று பரிகாசம் செய்து சிரிக்கப் போகிறான் என்பதாகும்.