Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 15)
Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி
ஹிமவந் நளஸேது மத்யபாஜாம் பரத அப்யர்ச்சித பாதுகா அவதம்ஸ: அதபோதநதர்மத: கவீநாம் அகிலேஷு அஸ்மி மனோரதேஷுஅபாஹ்ய:
பரதனால் ஆராதிக்கப்பட்ட ராமனின் பாதுகையை எனது தலைக்கு அலங்காரமாகக் கொண்டேன். உடனே ஏற்பட்டது என்ன? இமயம் தொடங்கி வானர வீரனான நளன் கட்டிய ஸேது வரை உள்ள அனைத்து கவிஞர்களையும் விட நான் உயர்ந்த மேன்மை பெற்றுவிடுவேன்.
எனது விருப்பம் நிறைவேற நான் பாதுகையை எனது தலையில் ஏற்றேன். இதனால் உண்டாவது - மற்ற கவிஞர்கள் தங்கள் விருப்பம் நிறைவேற எனது கவிதைகளை பின்பற்றுவர் என்று கருத்து. அனைவருக்கும் தேவையான விவரங்கள் இந்த ஸ்லோகங்களில் கிட்டும் என்றார்.