Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 13)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

நிஸ்ஸந்தேஹ நிஜ அபகர்ஷ விஷய உத்கர்ஷ: அபி ஹர்ஷ உதய ப்ரத்யூட க்ரம பக்தி வைபவ பவத் வையாத்ய வாசாலித: ரங்காதீச பதத்ர வர்ணந: க்ருத ஆரம்பை: நிகும்பை: கிராம் நர்மாஸ்வாதிஷு வேங்கடேச்வர கவி: நாஸீரம் ஆஸீததி

எனது தாழ்மை என்பதையும், நான் ஸ்தோத்ரம் செய்ய முற்படும் பாதுகைகளின் உயர்த்தி என்பதையும் பற்றிச் சந்தேகம் இன்றி நான் உணர்வேன். ஆயினும் எனது எல்லையற்ற மகிழ்வும், பாதுகைகள் மீது கொண்டுள்ள எல்லையற்ற பக்தியும் காரணமாக எனக்கு மிகவும் துணிச்சல் வந்தது என்றே கூற வேண்டும். இதன் காரணமாகவே நான் ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் விஷயமாகத் தாறுமாறான சொற்களைக் கொண்டு இவற்றைக் கூறுகிறேன். இதன் மூலம் தாறுமாறாகக் கவிதை இயற்றக்கூடியவர்களில், வேங்கடேசன் என்கிற நான், முதல் இடத்தைப் பிடிக்கிறேன்.