Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 10)
Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி
ச்ருத ப்ரஜ்ஞா ஸம்பந் மஹித மஹிமாந: கதிகதி ஸ்துவந்தி த்வாம் ஸந்த: ச்ருதி குஹரகண்டூஹர கிர: அஹம் து அல்ப: தத்வத் யதிஹ பஹு ஜல்பாமி ததபி த்வதாயத்தம் ரங்கக்ஷிதிரமண பாதாவநி! விது:
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை எப்போதும் பாதுகாத்து வரும் பாதுகையே! சாஸ்திர ஞானம் மூலமும், தங்களுக்கே உரிய ஞானம் மூலமும் பல பெரியவர்கள் உன்னை எவ்வளவோ துதி செய்துள்ளனர். அவர்கள் துதியானது காதுகளின் துளைகளுக்கு இன்பம் அளிக்கவல்லதாக உள்ளன. ஆனால் இது போன்ற ஞானம் ஏதும் இல்லாத நான், உன்னைக் குறித்துப் பிதற்றுகின்றேன். இதனையும் உனது செயல் என்றே பெரியவர்கள் கூறுகின்றனர்.
பெரியவர்கள் இவ்வாறு புகழ்ந்து கவிதைகள் இயற்றுவது பகவானின் செயல் என்று அவர்கள் கொள்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் உனது (பாதுகை) செயல் என்று அவர்கள் அறியவில்லை. ஆயினும் நான் அறிவேன். எனது சொற்கள் முழுவதும் உனது செயலே ஆகும். எனது தலையில் நீ நின்று இவ்வாறு செய்கிறாய் அல்லவா? ஆயினும் அவர்களைக் காட்டிலும் எனக்கு நீ அதிகமாகவே அருளினாய் என்றே கூறவேண்டும். இல்லையெனில் நன்கு கற்ற அவர்கள் துதிக்கு முன்பாக எனது துதிகள் எவ்வாறு நிற்க இயல்கிறது?