Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 8)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

அச்ரத்ததானநமபி நந்வதுநா ஸ்வகீயே ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணிபாதுகே த்வம் தேவ: ப்ரமாணம் இஹ ரங்கபதி: ததாத்வே தஸ்ய ஏவ தேவி பதபங்கஜயோ: யதா த்வம்

உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நான் எந்தவிதமான ச்ரத்தையும் இல்லாதவன் ஆவேன் . ஆயினும் உன்னைக் குறித்து ஸ்லோகங்கள் இயற்றும்படி நீ என்னைப் பணிக்கிறாய். ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளுக்கு நீ எவ்விதம் உள்ளாய் என்று நான் அறியவில்லை. அதனை ஸ்ரீரங்கநாதனே எனக்குக் கூறுவானாக!

ஒரு பொருளின் தன்மை என்ன, உயர்வு என்ன என்பதை அந்தப் பொருளின் உரிமையாளர் கூறினால் அல்லவா மற்றவர்களுக்குப் புரியும்? இது போன்று, இங்கு பாதுகையின் தன்மை என்ன என்பதை, அதனை அன்றாடம் தனது திருவடிகளில் அணிந்துள்ள ஸ்ரீரங்கநாதனே கூறவேண்டும் என்று வேண்டுகிறார்.