Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 6)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

தத் தே முகுந்த மணி பாதுகயோ: நிவேசாத் வல்மீக ஸம்பவகிரா ஸமதாம் மம உக்தி: கங்கா ப்ரவாஹ பதி தஸ்ய கியாநிவ ஸ்யாத் ரத்யோதகஸ்ய யமுநா ஸலிலாத் விசேஷ:

என்னுடைய இந்த ஸ்லோகங்களை (சொற்களை) நான், உயர்ந்த இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட முகுந்தனான க்ருஷ்ணனின் பாதுகைகள் மீது வைக்கிறேன் . இதனால் நிகழ்வது என்ன? இந்தச் ஸ்லோகங்கள், வால்மீகியின் இராமாயணத்திற்கு நிகராக மாறிவிடுகின்றன. மழைபெய்து வீதியில் ஓடும் நீர் மற்றும் யமுனை நதியின் நீர் ஆகிய இரண்டும் கங்கை நதியில் விழும்போது இரண்டிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை அல்லவா?

இங்கு ஒரு கேள்வி எழக்கூடும் . ஸ்லோகம் ஐந்தில், தன்னைத் தாழ்ந்தவன் என்று கூறுகிறார். தாழ்ந்தவனின் சொற்களில் பலன் ஏதும் எற்படுமா என்பதே அந்தக் கேள்வியாகும். இதற்கு விடை தருகிறார் . தான் தாழ்ந்தவனாக இருந்தாலும் தனது சொற்கள் ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் பற்றி உள்ளதால், தாமாகவே பலன் பெற்றுவிடும் என்று கூறுகிறார். இங்கு தெருவில் ஓடும் நீர் என்பதை இவரது சொற்களாகவும், யமுனையின் புனிதமான நீர் வால்மீகியின் சொற்களாகவும், கங்கை நீர் என்பது இரண்டையும் புனிதமாக்கும் பாதுகைகள் என்றும் கொள்ளலாம். மேலும் இதனை பாராயணம் செய்தால் இராமாயணம் போன்று பலன் அளிக்கும் என்றும் கருதலாம்.