Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 5)
Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி
நீசே அபி ஹந்த மம மூர்த்தநி நிர்விசேஷம் துங்கே அபி யத் நிவிசதே நிகம உத்தமாங்கே ப்ராசேத ஸ ப்ரப்ருதிபி: ப்ரதம உபகீதம் ஸ்தோஷ்யாமி ரங்கபதி பாதுகயோர் யுகம் தத்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் எப்படிப்பட்டவை என்றால் - மிகவும் உயர்ந்த பொருளான வேதங்களின் தலைகளிலும் உள்ளன; மிகவும் தாழ்ந்தவனான என் போன்றோர் தலைகளிலும் உள்ளன. இது வியப்பல்லவா? வால்மீகி போன்ற உயர்ந்தவர்களால் துதிக்கப்பட்ட அந்தப் பாதுகைகளை நானும் ஸ்தோத்திரம் செய்யப் போகிறேன்.
இங்கு வேதத்தின் தலை என்பது உபநிஷத்துக்கள் ஆகும். அவை பாதுகைகளைக் கூறுகின்றன என்று கருத்து. மேலும் வால்மீகி போன்றவர்கள், இராமனின் பாதுகையைத் தங்கள் மனக்கண்களால் மட்டுமே கண்டனர். ஆனால் இங்கு இவரோ அன்றாடம் திருவரங்கனின் பாதுகையை மெய்யான கண்களால் காண்பதால், வால்மீகி போன்றவர்களை விடத் தான் தாழ்ந்தவன் ஆனாலும், துதி செய்ய ஏற்றவன் என்றார். வேதங்களின் சிரஸ் பாகத்தில் அமரும் பாதுகைகள், தாழ்ந்தவர்களான நம் போன்றோர் தலைகளிலும் சடாரியாக அமர்வது, இத்தனை தாழ்ந்து வருவது அவற்றின் ஸௌலப்யத்தைக் குறிக்கும். வால்மீகியை ஏன் கூற வேண்டும்? இவருக்கு பாதுகையைப் பற்றிய ச்லோகம் எழுத வழிகாட்டியாக, பாதுகைகளைப் பற்றி முன்பே கூறியவரான வால்மீகியைக் கூறினார்.