Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 3)
Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி
வர்ணஸ்தோமை: வகுளஸுமந: வாஸநாம் உத்வஹந்தீம் ஆம்நாயாநாம் ப்ரக்ருதிம் அபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம் பாதே நித்ய ப்ரணிஹித தியம் பாதுகே ரங்கபர்த்து: த்வந்நாமாநம் முநிம் இஹ பஜே த்வாம் அஹம் ஸ்தோதுகாம:
ஹே பாதுகே! உன்னை வணங்கி ஸ்தோத்ரம் செய்யவேண்டும் என்று நான் எண்ணியுள்ளேன். இதனால் செய்தது என்ன? மகிழ மலர்கள் பல வைத்துக் கட்டப்பட்ட மாலையை ஒத்த மணம் வீசும்படியாக, நம்மாழ்வாரின் சொற்கள் என்னும் மலர்கள் கொண்டு கட்டப்பட்ட மாலையாக, தமிழ்வேதமாகிய திருவாய்மொழி உள்ளது. வேதத்திற்கு இணையாக உள்ளது போன்று இத்தகைய திருவாய்மொழியைக் கூறியது யார் என்றால் - எப்போதும் ஸ்ரீரங்கநாதனின் திருவடியையே சிந்தித்தபடி உள்ள நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வார், உனது பெயரான பாதுகை (சடாரி) என்றே கூறப்படுகிறார். அந்த முனிவரை நான் வணங்குகிறேன்.