Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 2)
Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி
பரதாய பரம் நமோஸ்து தஸ்மை ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம் யதுபஜ்ஞம் அசேஷத: ப்ருதிவ்யாம் ப்ரதித: ராகவ பாதுகா ப்ரபாவ:
பரதனின் மூலம் ஸ்ரீராமனின் பாதுகைகளுக்கு உள்ள பெருமைகள் முழுவதும் அனைத்து உலகங்களுக்கும் உணர்த்தப்பட்டன. இதன் மூலம் பலரும் பக்தி அடைந்தனர். இப்படிப்பட்ட பரதாழ்வானுக்கு என்னுடைய நமஸ்காரங்கள் என்றும் உரித்தாக வேண்டும்.
“பாதுகைக்கு இத்தனை பெருமை உள்ளது என்பதை நீவிர் எப்படி அறிந்தீர்?”, என்று பெரியபெருமாள் தேசிகரிடம் வினவினான். அதற்கு ஸ்வாமி அவனிடம், “நாம் பரதாழ்வான் மூலமாக அறிந்தோம்”, என்றார். அயோத்தியில் 14 வருடங்கள் பாதுகை மூலமாக எந்தவிதமான குறைகளும் இன்றி ஆண்டபோது, அனைத்து உலகங்களும் மிகுந்த நன்மை பெற்றன. இதனால் பல இடங்களிலும் எம்பெருமானின் திருவடி நிலைகளான சடாரியைத் தலைகளில் படும்படி வைப்பது என்ற வழக்கம் உண்டானது.ஆக நாம் அனைவரும் நன்மை பெறக் காரணமாக இருந்தவர் பரதாழ்வாரே ஆவார். எனவே இந்தச் ச்லோகத்தில் பரதனைப் போற்றுகிறார்.