Sri Paduka Sahasram - தனியன் (Thaniyan 1)

தனியன்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மென்மையான திருவடிகளை எப்போதும் பாதுகாக்கும் அவனுடைய பாதுகைகளைச் சிலர் தங்கள் தலையின் மீது ஆபரணம் போன்று, அலங்காரமாக ஏற்கின்றனர். அப்போது, அனைத்து உலகங்களையும் காத்து நிற்கும், மென்மையான தாமரை போன்று சிவந்த திருவடிகளின் தூசிகள், அவர்களது தலையின் மீது படிகின்றன. இதன் காரணமாக அவர்கள் அனைத்திலும் வெற்றியுடன் உள்ளனர்.

இந்தச் ச்லோகத்தின் மூலம், நம்மாழ்வாரின் புகழை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீரங்கநாதனின் பாதுகை என்பது நம்மாழ்வாரையே குறிக்கும். ஆக, நம்மாழ்வாரைத் தங்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுபவர்களுக்கு அனைத்திலும் வெற்றியே என்று கூறுகிறார். இந்த ச்லோகத்திற்கு, “பாதுகையைத் தங்களுடைய சிரஸ்ஸில் ஏற்பவர்களுடைய பாத தூசிகள் உலகம் எங்கும் பரவுகின்றன. அதனால் அனைத்து உலகமும் வெற்றியுடன் உள்ளது” என்றும் பொருள் உரைப்பர்.