Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1034)

Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை

அஜ்ஞாத்வ தே மஹத்வம் யதிஹ நிகதிதம் விச்வநாத க்ஷமேதா: ஸ்தோத்ரம் சைதத் ஸஹஸ்ரோத்தரம் அதிகதரம் த்வத் ப்ரஸாதாய பூயாத் த்வேதா நாராயணீயம் ச்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணநேந ஸ்பீதம் லீலாவதாரைரிதமிஹ குருதாமாயுராரோக்ய ஸௌக்யம் அஜ்ஞாத்வ தே மஹத்வம் யத் இஹ நிகதிதம் விச்வநாத க்ஷமேதா: ஸ்தோத்ரம் ச ஏதத் ஸஹஸ்ர உத்தரம் அதிகதரம் த்வத் ப்ரஸாதாய பூயாத் த்வேதா நாராயணீயம் ச்ருதிஷு ச ஜநுஷா ஸ்துத்யதா வர்ணநேந ஸ்பீதம் லீலா அவதாரை: இதம் இஹ குருதாம் ஆயு: ஆரோக்ய ஸௌக்யம் अज्ञात्वा ते महत्त्वं यदिह निगदितं विश्वनाथ क्षमेथाः स्तोत्रं चैतत्सहस्रोत्तरमधिकतरं त्वत्प्रसादाय भूयात् । द्वेधा नारायणीयं श्रुतिषु च जनुषा स्तुत्यतावर्णनेन स्फीतं लीलावतारैरिदमिह कुरुतामायुरारोग्यसौख्यम्

க்ருஷ்ணா! க்ருஷ்ணா! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! விச்வநாதனே! உனது பெருமைகளை முழுவதுமாக நான் அறியாதவன் ஆவேன். இருப்பினும் இங்கு நான் கூறியவற்றை நீ ஏற்றுக் கொண்டு பொறுக்கவேண்டும். ஆயிரம் ச்லோகங்களுக்குச் சற்றுக் கூடுதலாக உள்ள இந்தத் தொகுப்பானது, உனது அருளைப் பெறவேண்டும். வேதங்களில் உள்ள உனது லீலைகளைப் ப்ரமாணமாக (சாட்சிகள்) கொண்டு இந்த ஸ்தோத்திரம் உள்ளது. இது இரு வகையில் நாராயணீயம் என்று பெயர் கொண்டுள்ளது. நாராயணன் என்ற கவியின் மூலம் இயற்றப்பட்டதாலும், நாராயணனைக் குறித்து உள்ளதாலும் ஆகும். இப்படிப்பட்ட இது, இதனைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் நீண்ட ஆயுளையும், அப்படி வாழ்வதற்கான நல்ல உடல் ஆரோக்கியத்தையும் அளிக்கவேண்டும்.ஸ்ரீகுருவாயூரப்பன் திருப்பாதங்களே சரணம்க்ருஷ்ணா! குருவாயூரப்பா! கருணைக்கடலே! தஞ்சம் தஞ்சம் தஞ்சம்ஸ்ரீநாராயணபட்டத்ரி திருவடிகளே சரணம்