Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1033)
Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை
யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ பக்தாநாம் காம வர்ஷ த்யு தரு கிஸலயம் நாத தே பாதமூலம் நித்யம் சித்தஸ்திதம் மே பவநபுர பதே க்ருஷ்ண காருண்யஸிந்தோ ஹ்ருத்வா நிச்சேஷதாபாந் ப்ரதிசது பரமானந்த ஸந்தோஹ லக்ஷ்மீம் யோகீந்த்ராணாம் த்வத் அங்கேஷு அதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸ: பக்தாநாம் காம வர்ஷ த்யு தரு கிஸலயம் நாத தே பாதமூலம் நித்யம் சித்த ஸ்திதம் மே பவந புர பதே க்ருஷ்ண காருண்யஸிந்தோ ஹ்ருத்வா நிச்சேஷ தாபாந் ப்ரதிசது பரம ஆனந்த ஸந்தோஹ லக்ஷ்மீம் योगीन्द्राणां त्वदङ्गेष्वधिकसुमधुरं मुक्तिभाजां निवासो भक्तानां कामवर्षद्युतरुकिसलयं नाथ ते पादमूलम् । नित्यं चित्तस्थितं मे पवनपुरपते कृष्ण कारुण्यसिन्धो हृत्वा निश्शेषतापान्प्रदिशतु परमानन्दसन्दोहलक्ष्मीम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! கருணைக்கடலே! உன்னுடைய அனைத்து உறுப்புகளிலும், யோகிகளுக்கு மிகவும் ப்ரியமாகவும் இனிமையாகவும் உனது திருவடிகளே உள்ளன. மோக்ஷம் பெற்றவர்களின் இருப்பிடமும் அதுவே ஆகும். பக்தர்கள் வேண்டுவதை அவர்களுக்கு அளித்து மகிழும் கற்பகமரத்தின் தளிரானது அந்தத் திருபாதங்களே ஆகும். அத்தகைய உயர்ந்த உனது திருவடிகள் எப்போதும் என் மனதில் நிலையாக இருக்கவேண்டும். அப்படி இருந்துகொண்டு, எனது துன்பங்கள் அனைத்தையும் நீக்கி, எனக்கு பரமானந்தமான மோக்ஷ செல்வத்தையும் அளிக்க வேண்டும்.