Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1032)
Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை
மஜ்ஜீரம் மஞ்ஜுநாதைரிவ பதபஜநம் ச்ரேய இத்யாலபந்தம் பாதாக்ரம் ப்ராந்தி மஜ்ஜத் ப்ரணத ஜந மநோ மந்தரோத்தார கூர்மம் உத்துங்காதாம்ர ராஜந்நகர ஹிமகர ஜ்யோத்ஸ்நயா சாSச்ரிதாநாம் ஸந்தாப த்வாந்த ஹந்த்ரீம் ததிம் அநுகலயே மங்களாமங்குலீநாம் மஜ்ஜீரம் மஞ்ஜு நாதை: இவ பத பஜநம் ச்ரேய இதி ஆலபந்தம் பாத அக்ரம் ப்ராந்தி மஜ்ஜத் ப்ரணத ஜந மந: மந்தர உத்தார கூர்மம் உத்துங்க ஆதாம்ர ராஜத் நகர ஹிமகர ஜ்யோத்ஸ்நயா ச ஆச்ரிதாநாம் ஸந்தாப த்வாந்த ஹந்த்ரீம் ததிம் அநுகலயே மங்களாம் அங்குலீநாம் मञ्जीरं मञ्जुनादैरिव पदभजनं श्रेय इत्यालपन्तं पादाग्रं भ्रान्तिमज्जत्प्रणतजनमनोमन्दरोद्धारकूर्मम् । उत्तुङ्गाताम्रराजन्नखरहिमकरज्योत्स्नया चाऽऽश्रितानां सन्तापध्वान्तहत्त्रीं ततिमनुकलये मङ्गलामङ्गुलीनाम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது கொலுசுகள் இரண்டும், “எனது திருவடிகளை அடைவதே பேரானந்தமும், நன்மைகளையும் வழங்கும்”, என்று கூறுவதைப் போன்று இனிமையாக ஒலிக்கின்றன. அஞ்ஞானத்திலும் மோகத்திலும் ஆழ்ந்துள்ளவர்களின் மனதை, மேருமலையானது ஆமையால் தூக்கப்பட்டது போன்று தூக்கிவிட, உனது நுனிக்கால்கள், ஆமைக்கு ஒப்பாக உள்ளன. உனது திருவடி விரல்களில் உள்ள நகங்கள் சிவந்து அழகாக உள்ளன. அதில் இருந்து வெளியில் வரும் சந்திரனின் ஒளிக்கீற்று போன்ற குளிர்ந்த ஒளியானது, உன்னை அடைந்தவர்களின் துன்பங்களையும் அறியாமையையும் நீக்குகிறது. இப்படிப்பட்ட திருவடி விரல்களை நான் த்யானம் செய்கிறேன்.