Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1031)

Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை

ஊரு சாரூ தவோரூ கநமஸ்ருண ருசௌ சித்தசோரௌ ரமாயா: விச்வ க்ஷோபம் விசங்க்ய த்ருவமநிசம் உபௌ பீத சேலாவ்ருதாங்கௌ ஆநம்ராணாம் புரஸ்தாந்ந்யஸந த்ருத ஸமஸ்தார்த்த பாலீ ஸமுத்கத சாயம் ஜாநு த்வயம் ச க்ரம ப்ருதுல மநோஜ்ஞே ச ஜங்கே நிஷேவே ஊரு சாரூ தவ ஊரூ கந மஸ்ருண ருசௌ சித்த சோரௌ ரமாயா: விச்வ க்ஷோபம் விசங்க்ய த்ருவம் அநிசம் உபௌ பீத சேல ஆவ்ருத அங்கௌ ஆநம்ராணாம் புரஸ்தாத் ந்யஸந த்ருத ஸமஸ்த அர்த்த பாலீ ஸமுத்கத சாயம் ஜாநு த்வயம் ச க்ரம ப்ருதுல மநோஜ்ஞே ச ஜங்கே நிஷேவே ऊरू चारू तवोरू घनमसृणरुचौ चित्तचोरौ रमाया विश्वक्षोभं विशङ्क्य ध्रुवमनिशमुभौ पीतचेलावृताङ्गौ । आनम्राणां पुरस्तान्न्यसनधृतसमस्तार्थपाळीसमुद्गच्छायां जानुद्वयं च क्रमपृथुलमनोज्ञे च जङ्घे निषेवे

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது திருத்தொடைகள் இரண்டும் பருத்து மிகவும் அழகாக உள்ளன. அவை மஹாலக்ஷ்மியின் மனதையே கொள்ளை கொண்டவை அல்லவா? அவை மக்கள் மனதில் புகுந்து மயக்கிவிடும் என்பதால் எப்போதும் மஞ்சள் ஆடை மூலம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது போலும். உனது இரண்டு முழங்கால்களும், இரு பாத்திரங்கள் போன்று உள்ளன. உன்னை வணங்குபவர்களுக்கு அவர்கள் கேட்பதை அவற்றில் வைத்துள்ளாய் போலும்! கணுக்கால்கள் அகலமாகப் பருத்து உள்ளன. இவற்றை நான் த்யானம் செய்கிறேன்.