Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1030)
Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை
அங்கே பஞ்சாங்கராகைரதிசய விகஸத் ஸௌரபாக்ருஷ்டலோகம் லீநாநேக த்ரிலோகீ விததிமபி க்ருசாம் பிப்ரதம் மத்யவல்லீம் சக்ராச்ம ந்யஸ்த தப்தோஜ்ஜ்வல கநக நிபம் பீதசேலம் ததாநம் த்யாயாமோ தீப்த ரச்மி ஸ்புடமணி ரசநா கிங்கிணீ மண்டிதம் த்வாம் அங்கே பஞ்ச அங்க ராகை: அதிசய விகஸத் ஸௌரப ஆக்ருஷ்ட லோகம் லீந அநேக த்ரிலோகீ விததிம் அபி க்ருசாம் பிப்ரதம் மத்யவல்லீம் சக்ர அச்ம ந்யஸ்த தப்த உஜ்ஜ்வல கநக நிபம் பீத சேலம் ததாநம் த்யாயாம: தீப்த ரச்மி ஸ்புட மணி ரசநா கிங்கிணீ மண்டிதம் த்வாம் अङ्गे पञ्चाङ्गरागैरतिशयविकसत्सौरभाकृष्टलोकं लीनानेकत्रिलोकीविततिमपि कृशां बिभ्रतं मध्यवल्लीम् । शक्राश्मन्यस्ततप्तोज्वलकनकनिभं पीतचेलं दधानं ध्यायामो दीप्तरश्मिस्फुटमणिरशनाकिङ्गिणीमण्डितं त्वाम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது அழகான திருமேனியில் ஐந்து பொருள்கள் (குங்குமம், அகரு, கஸ்தூரி, கோரோகனம் மற்றும் ஹரிசந்தனம்) கொண்ட குழம்பு பூசப்பட்டுள்ளது. அதில் இருந்து வீசுகின்ற நறுமணத்தின் மூலம் நீ அனைவரையும் ஈர்க்கின்றாய். பல லோகங்கள் உனது திருவயிற்றில் உள்ளபோதிலும், உனது இடையானது மிகவும் மெல்லியதாகவே உள்ளது. அந்த அழகிய இடையில், இந்திர நீலக்கற்கள் பதிக்கப்பட்டதும், தங்கத்தையே உருக்கி ஆடையாகச் செய்ததும் போன்றுள்ள மஞ்சள் பட்டாடையை அணிந்துள்ளாய். உன்னுடைய அரைஞாண் கயிற்றில் உள்ள கற்கள் ஒளி வீசுகின்றன. அதில் சிறிய மணிகள், சதங்கைகள் கட்டப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட உனது திருமேனியை த்யானம் செய்கிறேன்.