Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1029)

Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை

உத்ஸர்ப்பத் கௌஸ்துப ஸ்ரீததிபி: அருணிதம் கோமளம் கண்டதேசம் வக்ஷ: ஸ்ரீவத்ஸ ரம்யம் தரளதர ஸமுத்தீப்ர ஹார ப்ரதாநம் நாநா வர்ண ப்ரஸூநாவளி கிஸலயிநீம் வந்யமாலாம் விலோலத் லோலம்பாம் லம்பமாநாமுரஸி தவ ததா பாவயே ரத்நமாலாம் உத்ஸர்ப்பத் கௌஸ்துப ஸ்ரீ ததிபி: அருணிதம் கோமளம் கண்ட தேசம் வக்ஷ: ஸ்ரீவத்ஸ ரம்யம் தரளதர ஸமுத்தீப்ர ஹார ப்ரதாநம் நாநா வர்ண ப்ரஸூந ஆவளி கிஸலயிநீம் வந்யமாலாம் விலோலத் லோலம்பாம் லம்பமாநாம் உரஸி தவ ததா பாவயே ரத்நமாலாம் उत्सर्पत्कौस्तुभश्रीततिभिररुणितं कोमळं कण्ठदेशं वक्षः श्रीवत्सरम्यं तरळतरसमुद्दीप्रहारप्रतानम् । नानावर्णप्रसूनावलिकिसलयिनीं वन्यमालां विलोल - ल्लोलम्बां लम्बमानामुरसि तव तथा भावये रत्नमालाम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது கழுத்துப் பகுதியானது, அங்குள்ள கௌஸ்துபம் என்ற மணியின் ஒளியால் சிவந்து அழகாக உள்ளது. திருமார்பில் உள்ள ஸ்ரீவத்ஸம் என்ற மச்சமானது உனக்கு மேலும் அழகு சேர்க்கிறது. அந்தத் திருமார்பில் உள்ள முத்து மாலைகள் அழகாக அசைகின்றன. பல நிறங்களை உடைய மலர்களாலும், தளிர் இலைகளாலும் தொடுக்கப்பட்ட வைஜயந்தி என்ற மாலை அழகாக உள்ளது. அதில் உள்ள மலர்களில் வண்டுகள் மொய்க்கின்றன. மேலும் இரத்தினங்களால் ஆன மாலையும் அசைகிறதே! இப்படிப்பட்ட உனது திருமார்பை நான் த்யானம் செய்கிறேன்.