Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1028)

Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை

பாஹுத்வந்த்வேந ரத்நோஜ்வல வலய ப்ருதா சோண பாணி ப்ரவாலேந உபாத்தாம் வேணுநாலீம் ப்ரஸ்ருத நகமயூகாங்குலீ ஸங்க சாராம் க்ருத்வா வக்த்ராரவிந்தே ஸுமதுர விகஸத் ராகமுத்பாவ்யமாநை: சப்தப்ரஹ்மாம்ருதைஸ்த்வம் சிசிரித புவநை: ஸிஞ்ச மே கர்ணவீதீம் பாஹு த்வந்த்வேந ரத்ந உஜ்ஜ்வல வலய ப்ருதா சோண பாணி ப்ரவாலேந உபாத்தாம் வேணுநாலீம் ப்ரஸ்ருத நக மயூக அங்குலீ ஸங்க சாராம் க்ருத்வா வக்த்ர அரவிந்தே ஸுமதுர விகஸத் ராகம் உத்பாவ்யமாநை: சப்த ப்ரஹ்ம அம்ருதை: த்வம் சிசிரித புவநை: ஸிஞ்ச மே கர்ண வீதீம் बाहुद्वन्द्वेन रत्नोज्वलवलयभृता शोणपाणिप्रवाळे - नोपात्तां वेणुनाळीं प्रसृतनखमयूखाङ्गुलीसङ्गशाराम् । कृत्वा वक्त्रारविन्द्रे सुमधुरविकसद्रागमुद्भाव्यमानैः शब्दब्रह्मामृतैस्त्वं शिशिरितभुवनैस्सिञ्च मे कर्णवीथीम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது திருக்கரங்களில் அழகிய இரத்தின வளையல்கள் உள்ளன. உனது உள்ளங்கையானது, இளம் தளிர் இலை போன்று சிவப்பாக உள்ளது. அந்தக் கைகளில் உள்ள நகங்கள் ஒளி வீசுகின்றன. இத்தனை அழகான விரல்கள் புல்லாங்குழலைப் பிடித்துள்ளதால், அது விரல்களின் சேர்க்கை மூலம் பல நிறங்களுடன் காணப்படுகிறது. நீ அந்தப் புல்லாங்குழலை, தாமரை இதழ் போன்று சிவந்த உனது திருவாயில் வைத்துள்ளாய். அதில் இருந்து, இனிமையான ராகத்தை உண்டு பண்ணுகிறாய். அதனைக் கேட்கும் உலகங்கள் மகிழ்கின்றன. அப்படிப்பட்ட இனிய நாதத்தின் மூலம் எனது காதுகளை நீ குளிரும்படிச் செய்யவேண்டும்.