Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1027)
Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை
உத்துங்கோல்லாஸி நாஸம் ஹரி மணி முகுர ப்ரோல்லஸத் கண்ட பாலீ வ்யாலோலத் கர்ண பாசாஞ்சித மகர மணீ குண்டல த்வந்த்வ தீப்ரம் உந்மீலத் தந்த பங்க்தி ஸ்புரதருணதர ச்சாய பிம்பாதராந்த: ப்ரீதி ப்ரஸ்யந்தி மந்தஸ்மித மதுரதரம் வக்த்ரமுத்பாஸதாம் மே உத்துங்க உல்லாஸி நாஸம் ஹரி மணி முகுர ப்ரோல்லஸத் கண்ட பாலீ வ்யாலோலத் கர்ண பாச அஞ்சித மகர மணீ குண்டல த்வந்த்வ தீப்ரம் உந்மீலத் தந்த பங்க்தி ஸ்புரத் அருணதர ச்சாய பிம்ப அதரந்த: ப்ரீதி ப்ரஸ்யந்தி மந்த ஸ்மித மதுர தரம் வக்த்ரம் உத்பாஸதாம் மே उत्तुङ्गोल्लासिनासं हरिमणिमुकुरप्रोल्लसद्गण्डपाली - व्यालोलत्कर्णपाशाञ्चितमकरमणीकुण्डलद्वन्द्वदीप्रम् । उन्मीलद्दन्तपङ्क्तिस्फुरदरुणतरच्छायबिम्बाधरान्तः - प्रीतिप्रस्यन्दिमन्दस्मितशिशिरतरं वक्त्रमुद्भासतां मे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது திருமுகத்தில் மூக்கானது எடுப்புடன் உள்ளது. பச்சை நிற மணியால் செய்யப்பட்ட கண்ணாடி போன்று உனது திருக்கன்னங்கள் உள்ளன. உனது திருச்செவிகளில் நீ அணிந்துள்ள மகர குண்டலங்கள், அழகாக அசைந்து அசைந்து, அந்தக் கன்னத்தில் இடித்து, ப்ரகாசிக்கச் செய்கின்றன. தந்தம் போன்ற அழகான பல்வரிசை ஒளி வீசியபடி உள்ளது. உனது உதடுகள் இரண்டும் கோவைப்பழம் போன்று சிவந்து உள்ளன. அந்த உதடுகளில் உள்ள புன்னகையானது, அருளை அள்ளி வீசுகிறது. இப்படியான உனது அழகான திருமுகம் எனக்குள் எப்போதும் தெளிவாகப் பதிந்து ஒளிரட்டும்.