Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1026)
Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை
ஹ்ருத்யம் பூர்ணாநுகம்பார்ணவ ம்ருது லஹரீ சஞ்சல ப்ரூவிலாஸை: ஆநீல ஸ்நிக்த பக்ஷ்மாவலி பரிலஸிதம் நேத்ரயுக்மம் விபோ தே ஸாந்த்ரச்சாயம் விசாலாருண கமலதலாகாரமாமுக்ததாரம் காருண்யாலோக லீலா சிசிரித புவநம் க்ஷிப்யதாம் மய்யநாதே ஹ்ருத்யம் பூர்ண அநுகம்பா அர்ணவ ம்ருது லஹரீ சஞ்சல ப்ரூ விலாஸை: ஆநீல ஸ்நிக்த பக்ஷ்ம ஆவலி பரிலஸிதம் நேத்ர யுக்மம் விபோ தே ஸாந்த்ர ச்சாயம் விசால அருண கமல தல ஆகாரம் ஆமுக்த தாரம் காருண்ய ஆலோக லீலா சிசிரித புவநம் க்ஷிப்யதாம் மயி அநாதே हृद्यं पूर्णानुकम्पार्णवमृदुलहरीचञ्चलभ्रूविलासै - रानीलस्निग्धपक्ष्मावलिपरिलसितं नेत्रयुग्मं विभो ते । सान्द्रच्छायं विशालारुणकमलदलाकारमामुग्धतारं कारुण्यालोकलीलाशिशिरितभुवनं क्षिप्यतां मय्यनाथे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! கருணை பெருகி நிற்கும் கடலின் அலைகள் போன்று வளைந்து அசைகின்ற உனது புருவங்கள், மனதை ஈர்க்கின்றன. கண் இமையின் முடிகள் கறுப்பாகவும், பளபளப்பாகவும் உள்ளன. அவற்றுடன் இணைந்த உனது திருக்கண்கள், தாமரைமலர் போன்று அழகாகவும் சிவந்தும் உள்ளன. அந்தத் திருக்கண்களின் உள்ளே காணப்படும் கருவிழிகள், தனது பார்வை மூலம் இந்த உலகத்தையே இன்பம் அடையச் செய்கின்றன. கருணை நிறைந்த உனது இந்தப் பார்வையானது, அனாதையாக உள்ள என் மீது விழக்கூடாதா?