Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1025)

Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை

நீலாபம் குஞ்சிதாக்ரம் கநமமலதரம் ஸம்யதம் சாரு பங்க்யா ரத்நோத்தம்ஸாபிராமம் வலயிதும் உதயச்சந்த்ரகை: பிஞ்சஜாலை: மந்தார ஸ்ரக் நிவீதம் தவ ப்ருது கபரீ பாரமாலோகயேSஹம் ஸ்நிக்தச்வேதோர்த்வ புண்ட்ராமபி ச ஸுலலிதாம் பால பாலேந்துவீதீம் நீலாபம் குஞ்சிதாக்ரம் கநம் அமலதரம் ஸம்யதம் சாரு பங்க்யா ரத்ந உத்தம்ஸ அபிராமம் வலயிதும் உதயத் சந்த்ரகை: பிஞ்சஜாலை: மந்தார ஸ்ரக் நிவீதம் தவ ப்ருது கபரீ பாரம் ஆலோகயே அஹம் ஸ்நிக்த ச்வேத ஊர்த்வ புண்ட்ராம் அபி ச ஸுலலிதாம் பால பால இந்து வீதீம் नीलाभं कुञ्चिताग्रं घनममलतरं संयतं चारुभङ्ग्या रत्नोत्तंसाभिरामं वलयितमुदयच्चन्द्रकैः पिञ्छजालैः । मन्दारस्रङ्निवीतं तव पृथुकबरीभारमालोकयेऽहं स्निग्धश्चेतोर्ध्वपुण्ड्रामपि च सुललितां फालबालेन्दुवीथीम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அழகான உனது தலைமுடியானது கறுத்து உள்ளது; சுருள் சுருளான நுனிகளை உடையது; அடர்த்தியாக உள்ளது; அழகாக மடித்துக் கொண்டையாகக் கட்டப்பட்டது; சிறந்த இரத்தினக்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது; பெரிய கண்களை உடைய மயிற்பீலிகள் அதில் உள்ளன. மந்தார மாலை அணியப்பட்டுள்ளது. இப்படியாக உனது தலையழகை நான் காண்கிறேன். கீழே இளம்சந்திரன் போன்ற வெண்மையான நெற்றியைக் காண்கிறேன்; அதில் உள்ள திலகமானது பளபள என மேல்நோக்கி இடப்பட்டுள்ளது.