Sriman Narayaneeyam - Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை (ச்லோகம் 1024)
Dasaka 100 - கேசாதி பாத வர்ணனை
அக்ரே பச்யாமி தேஜோ நிபிடதர கலாயாவலீ லோபநீயம் பீயூஷாப்லாவிதோSஹம் ததநு ததுதரே திவ்ய கைசோரவேஷம் தாருண்யாரம்ப ரம்யம் பரம ஸுக ரஸாஸ்வாத ரோமாஞ்சிதாங்கை: ஆவிதம் நாரதாத்யைர் விலஸத் உபநிஷத் ஸுந்தரீ மண்டலைச்ச அக்ரே பச்யாமி தேஜ: நிபிடதர கலாய அவலீ லோபநீயம் பீயூஷ ஆப்லாவித: அஹம் தத் அநு தத் உதரே திவ்ய கைசோர வேஷம் தாருண்ய ஆரம்ப ரம்யம் பரம ஸுக ரஸ ஆஸ்வாத ரோமாஞ்சித அங்கை: ஆவிதம் நாரத ஆத்யை: விலஸத் உபநிஷத் ஸுந்தரீ மண்டலைச்ச अग्रे पश्यामि तेजो निबिडतरकलायावलीलोभनीयं पीयूषाप्लावितोऽहं तदनु तदुदरे दिव्यकैशोरवेषम् । तारुण्यारम्भरम्यं परमसुखरसास्वादरोमाञ्चिताङ्गै - रावीतं नारदाद्यैविलसदुपनिषत्सुन्दरीमण्डलैश्च
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதோ என் கண்களின் முன்னால் ஓர் ஒளிப்பிழம்பை நான் காண்கிறேன். அது காயாம்பூ மலர்க்கொத்து போன்று அழகான நிறமுடையதாக உள்ளது. அதன் மூலம் நான் அமிர்தத்தில் நனைகிறேனே! அந்த ஒளியின் நடுவில் மனம் கவர்கின்ற சிறிய சிறுவனாகிய உனது உயர்ந்த உருவத்தைக் காண்கிறேன். அது மிகவும் அழகாக உள்ளது; இளமையுடன் உள்ளது. நாரதர் போன்ற முனிவர்கள் அதன் இன்பத்தை அனுபவித்த வண்ணம் உள்ளனர். உபநிஷத்துக்கள் அனைத்தும் தேவலோக மங்கைகளாக மாறி உன்னைச் சுற்றி நிற்கின்றனர்.