Sriman Narayaneeyam - Dasaka 10 - பலவிதமான படைப்புகள் (ச்லோகம் 100)

Dasaka 10 - பலவிதமான படைப்புகள்

மித்யா க்ரஹாஸ்மிமதிராக விகோப பீதி: அஜ்ஞான வ்ருத்திமிதி பஞ்ச விதாம் ஸ ஸ்ருஷ்ட்வா உத்தாம தாமஸ பதார்த்த விதாந தூன: தேநே த்வதீய சரணஸ்மரணம் விசுத்யை மித்யா ஆக்ரஹ அஸ்மிமதி ராக விகோப பீதி: அஜ்ஞான வ்ருத்திம் இதி பஞ்சவிதாம் ஸ ஸ்ருஷ்ட்வா உத்தாம தாமஸ பதார்த்த விதாந் அதூன: தேநே த்வதீய சரண ஸ்மரணம் விசுத்யை मिथ्याग्रहास्मिमतिरागविकोपभीति - रज्ञानवृत्तिमिति पञ्चविधां स सृष्ट्वा । उद्दामतामसपदार्थविधानदून - स्तेने त्वदीयचरणस्मरणं विशुद्ध्यै

குருவாயூரப்பா! அடுத்து, ஐந்துவிதமான அறியாமையை படைத்தான். இவை மித்யாக்ரஹம், அஸ்மிமதி, ராகம், கோபம், பயம் என்பவை ஆகும். இதன் பிறகு இந்த அறியாமைக்கு இயல்பான தமோ குணத்தையும் படைத்தான். இப்படியாக அவன் தாழ்வனவற்றை படைத்தது அவன் அறியாமையே ஆகும். அந்த அறியாமை நீங்க உன்னை சரணம் என்று த்யானித்தான் (விளக்கம் காண்க).

ஆத்மா வேறு, உலகம் வேறு என்று எண்ணுதல் = மித்யாக்ரஹம்; உடலையே தான் என்று கொள்ளுதல் = அஸ்மிமதி: பொருளில் வைக்கப்படும் ஆசை = ராகம்; ஆசை வைத்த பொருளைத் தன்னிடம் இருந்து எடுப்பவன் மீது வரும் வெறுப்பு = கோபம்; தனது பொருள்கள் பறிபோகும் என்று நினைத்தல் = பயம்.