Sriman Narayaneeyam - Dasaka 99 - வேத ஸ்துதி (ச்லோகம் 1023)
Dasaka 99 - வேத ஸ்துதி
அவ்யக்தம் தே ஸ்வரூபம் துரதிகமதமம் தத்து சுத்தைக ஸத்வம் வ்யக்தம் சாப்யேததேவ ஸ்புடமம்ருத ரஸாம்போதி கல்லோல துல்யம் ஸர்வோத்க்ருஷ்டாமபீஷ்டாம் ததிஹ குண ரஸேநைவ சித்தம் ஹரந்தீம் மூர்த்திம் தே ஸம்ச்ரயேSஹம் பவநபுர பதே பாஹி மாம் க்ருஷ்ண ரோகாத் அவ்யக்தம் தே ஸ்வரூபம் துரதிகமதமம் தத் து சுத்த ஏக ஸத்வம் வ்யக்தம் ச அபி ஏதத் ஏவ ஸ்புடம் அம்ருத ரஸ அம்போதி கல்லோல துல்யம் ஸர்வ உத்க்ருஷ்டாம் அபீஷ்டாம் தத் இஹ குண ரஸேந ஏவ சித்தம் ஹரந்தீம் மூர்த்திம் தே ஸம்ச்ரயே அஹம் பவநபுர பதே பாஹி மாம் க்ருஷ்ண ரோகாத் अव्यक्तं ते स्वरूपं दुरधिगमतमं तत्तु शुद्धैकसत्त्वं व्यक्तञ्चाप्येतदेव स्फुटममृतरसाम्भोधिकल्लोलतुल्यम् । सर्वोत्कृष्टामभीष्टां तदिह गुणरसेनैव चित्तं हरन्तीं मूर्तिं ते संश्रयेऽहं पवनपुरपते पाहि मां कृष्ण रोगात्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது (நிர்குண) ஸ்வரூபமானது அறிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது ஆகும். சுத்தமான ஸத்வ குணம் உடைய இந்த (ஸகுண) ரூபமானது இந்த்ரியங்களான கண் போன்றவற்றுக்கு எளிதாகப் புலப்படுகிறது. இது பரமானந்தக் கடல் அலைக்கு ஒப்பானது ஆகும். எனவே இந்தக் க்ருஷ்ண வடிவம் அனைத்திலும் சிறந்தது; அனைவருக்கும் ப்ரியமானது; கல்யாண குணங்களால் அனைவரையும் ஈர்க்கக்கூடியது ஆகும். குருவாயூரில் உள்ள இப்படிப்பட்ட உனது திவ்யமங்கள விக்ரஹத்தை நான் வணங்குகிறேன். க்ருஷ்ணா! குருவாயூரப்பா! என்னை எனது பிணிகளில் இருந்து காக்கவேண்டும்.***