Sriman Narayaneeyam - Dasaka 99 - வேத ஸ்துதி (ச்லோகம் 1021)

Dasaka 99 - வேத ஸ்துதி

மூர்த்நாமக்ஷ்ணாம் பதாநாம் வஹஸி கலு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விச்வம் தத் ப்ரோத்கம்யாபி திஷ்டந் பரிமித விவரே பாஸி சித்தாந்தரேSபி பூதம் பவ்யம் ச ஸர்வம் பரபுருஷ பவாந் கிஞ்ச தேஹேந்த்ரியாதிஷு ஆவிஷ்டோSப்யுத்கதத்வாதம்ருத ஸுக ரஸம் சாநுபுங்க்க்ஷே த்வமேவ மூர்த்நாம் அக்ஷ்ணாம் பதாநாம் வஹஸி கலு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விச்வம் தத் ப்ரோத்கம்ய அபி திஷ்டந் பரிமித விவரே பாஸி சித்த அந்தரே அபி பூதம் பவ்யம் ச ஸர்வம் பரபுருஷ பவாந் கிஞ்ச தேஹ இந்த்ரிய ஆதிஷு ஆவிஷ்ட: அபி உத்கதத்வாத் அம்ருத ஸுக ரஸம் ச அநு புங்க்க்ஷே த்வம் ஏவ मूर्ध्नामक्षणां पदानां वहसि खलु सहस्राणि सम्पूर्य विश्वं तत्प्रोत्क्रम्यापि तिष्ठन् परिमितविवरे भासि चित्तान्तरेऽपि । भूतं भव्यं च सर्वं परपुरुष भवान् किञ्च देहेन्द्रियादि - ष्वाविष्टोप्युद्गतत्वादमृतसुखरसं चानुभुङ्क्षे त्वमेव

குருவாயூரப்பா! பரமபுருஷா! நீ ஆயிரம் தலைகள், கண்கள், கால்கள் உடையவன் ஆவாய். அனைத்து உலகங்களிலும் பரவி உள்ளாய். அதனினும் அப்பாலும் உள்ளாய். ஆயினும், மிகவும் சிறிய மனித இதயத்திலும் உள்ளாய். முன்பு இருந்தது, இப்போது இருப்பது, இனி இருக்கப்போவது ஆகிய அனைத்தும் நீயே ஆவாய். உடலிலும் புலன்களிலும் நீயே உள்ளாய். ஆயினும், அவற்றின் மீது பற்று இல்லாமல் மோக்ஷ ஸுகத்தை அனுபவித்து வருகிறாய்.