Sriman Narayaneeyam - Dasaka 99 - வேத ஸ்துதி (ச்லோகம் 1019)
Dasaka 99 - வேத ஸ்துதி
ஆப: ஸ்ருஷ்ட்யாதி ஜந்யா: ப்ரதமமயி விபோ கர்ப்பதேசே ததுஸ்த்வாம் யத்ர த்வய்யேவ ஜீவா ஜலசயந ஹரே ஸங்கதா ஐக்யமாபந் தஸ்யாஜஸ்ய ப்ரபோ தே விநிஹிதம் அபவத் பத்மமேகம் ஹி நாபௌ திக் பத்ரம் யத் கிலாஹு: கநகதரணி ப்ருத் கர்ணிகம் லோகரூபம் ஆப: ஸ்ருஷ்டி ஆதி ஜந்யா: ப்ரதமம் அயி விபோ கர்ப்ப தேசே தது: த்வாம் யத்ர த்வயி ஏவ ஜீவா ஜலசயந ஹரே ஸங்கதா ஐக்யம் ஆபந் தஸ்ய அஜஸ்ய ப்ரபோ தே விநிஹிதம் அபவத் பத்மம் ஏகம் ஹி நாபௌ திக் பத்ரம் யத் கில ஆஹு: கநகதரணி ப்ருத் கர்ணிகம் லோக ரூபம் आपः सृष्ट्यादिजन्याः प्रथममयि विभो गर्भदेशे दधुस्त्वां यत्र त्वय्येव जीवा जलशयन हरे सङ्गता ऐक्यमापन् । तस्याजस्य प्रभो ते विनिहितमभवत् पद्ममेकं हि नाभौ दिक्पत्रं यत्किलाहुः कनकधरणिभृत् कर्णिकं लोकरूपम्
குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! ஸ்ருஷ்டி காலத்திற்கு முன்பு எங்கும் நீராகவே இருந்தது. அந்த நீரானது தனது கர்ப்பத்தில் வைத்தது போன்று உன்னைச் சூழ்ந்து நின்றது. நீ அதில் சயனித்திருந்தாய். அப்போது அனைத்து ஜீவன்களும் உன்னிடமே ஒடுங்கியிருந்தன. அந்த நேரம், பிறப்பில்லாத உனது தொப்புளின் நடுவில் இருந்து ஒரு தாமரை மலர் தோன்றியது. திசைகளையே இதழ்களாகவும், மேருவைத் தனது கொட்டையாகவும் கொண்ட அந்த மலரை, உலகின் ரூபம் என்று கூறுகின்றனர்.